சென்னை:
காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையினர் தைரியமாக எதிர்கொண்டனர். காவல் துறையில் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் இது சாத்தியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதயத்தில் எந்தக் கெடுதலுமின்றி நமது திறமையாலும், அறிவினாலும் தொடர்ந்து போரிடுவோம். தமிழகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel