டில்லி

ந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆகி உள்ளது.

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு  முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.  பிறகு அது இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் பரவியது.   இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் படு வேகமாக பரவுகிறது,

தற்போது 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.   இந்தியாவில் இதுவரை மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 422 ஆக உள்ளது.  இதில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் அதாவது 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக டில்லியில் 79 பேரும் குஜராத்தில் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தவிரத் தெலுங்கானாவில் 41 பேரும், கேரளாவில் 38 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 130 பேர் குணம் அடைந்துள்ளனர்.