
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது. இந்த முக்கியமான நாளில், ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கவுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
தனது தந்தைக்கு தமிழில் அதிகம் எழுத தெரியாது எனவும், ஒரு முறை குரல் வழியாக செய்தி அனுப்பியதே இந்த செயலியை உருவாக்க காரணமாக இருந்தது என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில ‘ஹுட்’ வெளியிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]Hoote – Voice based social media platform, from India 🇮🇳 for the world 🌍🙏 https://t.co/Fuout7w2Tr
— Rajinikanth (@rajinikanth) October 25, 2021