Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”.

பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

அஷோக் குமார் இயக்கத்தில் வெளியான ‘பீச்சாங்கை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த R.S.கார்த்திக், தான் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு குணா பாலசுப்ரமணியம் இசையமைக்க, அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜூ ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்றபோவது இல்லை,

இந்நிலையில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்து, சோனி லைவ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தப்படி, வரும் 29ஆம் தேதி ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளது.