ஜூனியர் NTR-க்கும் நந்தமூரி பாலகிருஷ்ணா அவர்களுக்கும் மக்கள் தொடர்பாளராக செயல்பட்டு வந்தவர் மகேஷ்.S.கொனேரு . இவர் தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட.
பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு விளம்பர வடிவமைப்பும் செய்துள்ளார். தொடர்ந்து தனது ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியாவை தயாரித்தவர் இவர் தான். விஜய் நடித்த பிகில் மற்றும் மாஸ்டர் படங்களை மகேஷ்.S.கொனேரு தெலுங்கில் விநியோகஸ்தராகவும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மகேஷ்.S.கொனேரு திடீரென இன்று காலை காலமானார். 37 வயதே ஆன மகேஷ்.S.கொனேரு உயிரிழப்பு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
With the heaviest of heart and in utter disbelief, I am letting you all know that my dearest friend @SMKoneru is no more. I am shell shocked and utterly speechless.
My sincerest condolences to his family and his near and dear. pic.twitter.com/VhurazUPQk
— Jr NTR (@tarak9999) October 12, 2021