இயக்குனர் மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ள ஜாங்கோ திரைப்படம் இந்தியாவின் முதல் டைம் லூப் சயின்ஸ்ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாகிறது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் C.V.குமாரின், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் சுரேந்திரன் ரவியின் ஜென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

சதீஷ் குமார் மற்றும் மிருணாளினி ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க அனிதா சம்பத், ஹரிஷ் பெறடி, வேலுபிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டானியல் மற்றும் நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக்.கே.திலக் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ள ஜாங்கோ படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .