சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையில் மட்டும் 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,63,789 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 17,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 26,11,061 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,578 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் இன்று 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 242492 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 238114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 549827 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 539375 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் இன்று 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 168768 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 165200 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2472
சென்னையில் நேற்று மேலும் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் இதுவரை 5,49,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இதுவரை 8,482 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் நேற்று 211 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,39,375 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
30.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 52,33,416 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 30.09.2021 அன்று 15,867 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.