டில்லி

டில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்ட்ம் 300 நாட்களை தாண்டி உள்ளது.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிகவி வருகிறது.  இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லி எல்லையில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இவர்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் மத்திய அரசின் பிடிவாதத்தால் இந்த போராட்டம் ஒரு முடிவை எட்டாமல் தொடந்து வருகிறது.  இந்நிலையில் நேற்றுடன் இந்த போராட்டம் தனது 300 நாளை நிறைவு செய்துள்ளது.  மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறாததால் விவசாயிகள் போராட்டம் மேலும் தொடர்கிறது.

இது குறித்து போராட்டத்தை நடத்தும் சம்யுக்த கிசார் மோர்ச்சா அமைப்பு, “மத்திய அரசு எங்கள் கோரிக்கைகள் குறித்து தெளிவாக தெரியும்.  ஆயினும் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்டு வருகிறது.  எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டட்ம் தொடரும்.   வரும் 27 ஆம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.  அதற்கான பணிகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.