நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் இருந்து தமிழக அளுநர் விலகல்

Must read

சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி நகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்து விலகி உள்ளார்.

நாகாலாந்து மாநிலத்த்ல் பிரிவினை வாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு மத்தியஸ்தர் குழு ஒன்றை அமைத்தது.   அதில் அப்போதைய நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர் என் ரவி இணைக்கப்பட்டிருந்தார்.  நாகாலாந்து பிரிவினை வாதக் குழுக்களில் முக்கியமானது என் எஸ் ஐ என் குழு ஆகும்.

அக்குழு ஆர் என் ரவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இந்த அமைப்பு மத்தியஸ்தர் குழுவில் இருந்து ஆர் என் ரவியை நீக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.  இதற்கு மத்திய அரசு செவி சாயக்காததால் பிரச்சினை வலுவடநிது கருத்து வேறுபாடு மிகவும் முற்றியது.  இந்நிலையில் தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கபட்டார்.

எனவே அவர் நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் தொடர்வாரா என கேள்வி எழுந்தது.  இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஆர் என் ரவி அந்தக் குழுவில் இருந்து விலகி உள்ளார். ஆர் என் ரவிக்கு பதிலாக உளவுப் பிரிவின் முன்னாள் சிறப்பு இயக்குனர் அக்‌ஷய் மிஸ்ரா பேச்சு வார்த்தையை தொடர்வார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல மாதங்களாக என் எஸ் இ என் மற்றும் ரவி இடையே ஆன கருத்து வேறுபாட்டினால் நின்ரு போன பேச்சு வார்த்தை மீண்டும் தொடரலாம் என எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

 

More articles

Latest article