சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – இரண்டாம் பகுதி
நேற்று சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம். இன்று மேலும் தகவல்களை காண்போம்
16. கிருபானந்த வாரியார் ஐயா தமக்குக் கிடைத்த நன்கொடை மூலம் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.
- விமானம்தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.
- ரூபாய்20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்கப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- அம்மனைமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.
- பக்தர்கள்அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்குப் பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது.
- மாசிமாதக் கடைசி ஞாயிறன்று அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை நிவேதிக்கப்படுகின்றன.
- அதாவதுசாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன.
- சித்திரைமாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களைக் குளிர வைக்கும் தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே, பக்தர்கள் பூமாரி பொழிந்து குளிரச் செய்கிறார்கள்.
- சமயபுரத்தாள்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு & மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு & வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.
- மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
- இரண்டாம்பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
- சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.
- அம்பாளின்கருவறையைச் சுற்றி எப்போதும் ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள், அன்னை குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
- பார்வைஇழந்த சிவந்தி லிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.
- பெருமாளிடமும்,ஈஸ்வரரிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!
- கொள்ளிடம்தான் அண்ணன் ஸ்ரீ ரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது.
தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள்.
- அன்றுஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள்,
மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதைத் தீர்த்தவாரி விழா என்பர்.
- சித்திரைத்திருவிழா பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார்.
- இங்குஉயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.
- நமதுகுறைகளைக் காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்பமரத்தில் கட்டி பிரார்த்தித்தால் உடனே குறைகள் தீருகிறது.