சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 12ந்தேதி மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களிளும், சென்னையில் மட்டும் 1600 முகாம்களும் நடைபெற்றன. இந்த ஒரு நாள் முகாமில் மட்டும் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். சென்னையில் இதுவரை 1,91,350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதையடுத்து மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாமை நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வரும் 19ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்,.

தமிழகத்தில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் இன்னும் வராததால் தமிழகம் முழுவதும் வரும் 17ல் நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.