சென்னை:
தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம் இன்று இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாலை 4.23 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 20.11 லட்சமாக உள்ளது என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தை விட அதிகம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel