டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 376 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 32,198 டிஸ்சார்ஜ்  மற்றும் 308 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி ( காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்)  நாட்டில் கொரோனாவால் புதிதாக 33, 376 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,08,330 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  புதிதாக 308  பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,42,317ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 32,198  பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,23,74,497 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,91,516 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் 10 வரை மொத்தம் 54,01,96,989 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, அதில் 15,92,135 மாதிரிகள் நேற்று சோதனை செய்யப்பட்டடுள்ளன.

இந்தியாவில் இதுவரை 73,05,89,688  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில் 65,27,175  பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.