வாஷிங்டன்:  செப்டம்பர் 11ந்தேதி உலக வரலாற்றில் அழிக்க முடியாத சோக தினமாக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் உயர்கோபுரமான இரட்டை கோபுரம் மீது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி பயங்கரவாதிகள் விமானத்தைக்கொண்டு தாக்குதல் நடத்தினார். உலக வல்லரசுகளில் முன்னோடியாக உள்ள அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்த சோக சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.

செப்டம்பர் 11-ஆம் தேதியன்று உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் பென்டகனையும் தாக்குவதற்கு வெறும் கத்திகளும், வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறப்பட்ட பொய்யான மிரட்டல்கள்  வெளியான நிலையில், யுனைட்டட் ஏர்லைன்ஸ் 93 விமானத்தைக்கொண்டு,   2001 செப்டம்பர் 11 அன்று காலை 8.45 மணிக்கு, அல்கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்களை மோதியதில், அதன் இரண்டு கோபுரங்களும் சீட்டு கட்டை போல் நொறுங்கி விழுந்தன.

அல்­காய்தா பயங்­க­ர­வாத அமைப்பு, விமானங்களை கடத்தி. அதைக்கொண்டே இரட்டை கோபுரங்கள் மீது மொதி, அதை உடைத்து. இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்திய நிலையில், 3வது விமானம்  அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது மோதியது.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில், 2,983 பேர் உயிரிழந்த நிலையில், பல நூறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த  பயங்கரவாத தாக்குதலால் அமெரிக்கா நிலைகுலைந்தது.

முன்னதாக செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு நியூஜெர்சி மாநிலத்தின் நெவார்க் விமான நிலையத்தில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகரை நோக்கி இந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தைக் கடத்துவதற்காக லெபனானைச் சேர்ந்த ஜியாத் ஜர்ரா, சயீத் அல் காம்தி, அகமத் நமி, அகமத் அல் ஹஸ்னாவி ஆகிய நான்கு பேர் பாதுகாப்புப் பரிசோதனைகளைக் கடந்து விமானத்துக்குள் சென்றனர். 182 பேர் பயணிக்கக்கூடிய யுனைட்டட் 93 விமானத்தில் அன்றைக்கு 4 கடத்தல்காரர்களுடன் சேர்த்து வெறும் 37 பேர் மட்டுமே பயணித்தனர். அவர்களோடு விமானிகள் ஜேசன் தஹல், லேராய் ஹோமர் மற்றும் 5 பணியாளர்களும் இருந்தனர்.

நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள், பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் ஆகியவற்றைத் தாக்கிய விமானங்கள் பெரிய அளவில் தாமதம் இல்லாமல் புறப்பட்டுச் சென்றன. ஆனால் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் மட்டுமே 8.42 மணிக்குப் 25 நிமிடங்களுக்கும் மேலாக தாமதமாகப் புறப்பட்டது. மற்ற மூன்று விமானங்களும் தரையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களுக்குள்ளாக கடத்தப்பட்டன. ஆனால் யுனைட்டட் 93 விமானம் கடத்தப்படுவதற்கு சுமார் 46 நிமிடங்கள் ஆகியிருந்தன. விமானம் புறப்பட்டு நடுவானில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட விவரம் பரவத் தொடங்கியிருந்தது.

இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து,   பின்லேடனை வேட்டையாடும் பணியில் தீவிரமாக இறங்கியது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகே, பாகிஸ்தானில் பதுங்கி இருந்த,  ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் சென்ற சுமார் 20 வீரர்கள், பின் லேடன் வீட்டு மாடியில் தரையிறங்கி 2011, மே முதல் தேதியன்று அவரை சுட்டு வீழ்த்தினார்கள்.

உலக வரலாற்றில் உலக வல்லரசான அமெரிக்காவுக்கே அதிர்ச்சி அளித்த  சோகமான சம்பவம் நடைபெற்ற சோகமான நாள் இன்று. இந்த சோக சம்பவம் நடைபெற்று 20 ஆண்டுகள் கடந்தாலும், அதன் நினைவுகளை  ஒருபோதும் மறக்க இயலாது என்பதே உண்மை.