
இசைமப்பாளர் அனிருத் பாடல்களால் பெயர் வாங்கியதைவிட சர்ச்சைகளால் “புகழ்” பெற்றததுதான் அதிகம்.
ஆண்ட்ரியாவுடன் லிப் டூ கிஸ், பீப் சாங் விவகாரம் என்று அவரப் பற்றி சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்த பீப் சாங் விவகாரத்தில் பிரச்சினை பெரிதாகி, சில வாரங்களுக்கு முன்பு கோவை போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் ஆஜராகி விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார்.
அதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அனிருத்.

நேற்று முதல் எமி ஜாக்சனுடன் அனிருத் நெருக்கமாக தோன்றும் சில கவர்ச்சியான போட்டோக்கள் சமூகவலைத் தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
எமி ஜாக்சன் குறை குறை உடையில் இருக்க, அவரது கழுத்தை வளைத்து பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் அனிருத்.
விவகாரம் இத்தோடு முடியவில்லை. “தனிமையில் எடுக்கப்பட்ட படங்களை, வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்பி விட்டார் அனிருத்” என்று கண்ணை கசக்குகிறாராம் எமி.
அநேகமாய் “உச்ச நட்சத்திரத்திம்” பஞ்சாயத்தைக் கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel