டில்லி
இந்தியாவில் நேற்று 14,10,649 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,517 அதிகரித்து மொத்தம் 3,30,27,136 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 218 அதிகரித்து மொத்தம் 4,40,785 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 38,069 பேர் குணமாகி இதுவரை 3,21,74,493 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,99,023 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன. கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,10,649 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 53,14,68,867 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று 1,62,119 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 4,31,17,256 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.