அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி
நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் மறைந்த எம்பி வசந்தகுமார் மணி மண்டபம் மற்றும் சிலை திறக்கப்பட்டுள்ளது.
வசந்த் அண்ட் கோ நிறுவனர் வசந்தகுமார்க் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவர் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலமானார். வசந்தகுமார் உடல் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கன்னியாகுமரி மாவட்ட்த்தில் உள்ள அகஸ்தீச்வரம் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபமும் நுழைவு வாயிலில் அவருடைய முழு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வசந்தகுமாரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மணிமண்டபம் மற்றும் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் செயலர் வல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். விழாவுக்கு வந்தவர்களைக் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த் வரவேற்றார். தவிர வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி, மகன் வினோத்குமார் மற்றும் மகள் தங்கமலர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபி மனோகரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.