சென்னை: தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன். ஒலிம்பிக் வீரர்கள் 2 பேருக்கு  அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக், நைரோபியில் நடந்த உலக தடகள போட்டிகளில் பங்கேற்ற, வீரர், வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் ‘காசாகிராண்டு’ சார்பில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வீரர்கள்பாராட்டி பேசினார்.

அப்போது, தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் , வீரர்களுக்கு நல்ல பயிற்சியாளர்கள் வாயிலாக, சிறப்பான பயிற்சி அளிக்கப்படும் அதற்காக மாவட்டங்களில் சிந்தெடிக் மைதானங்கள் உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன், விளையாட்டு வீரர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

இந்த  நிகழ்ச்சியில், அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், மதியழகன், தடகள சங்க தலைவர் தேவாரம், கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜூன், காசாகிராண்டு நிறுவனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.