சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள  ரூ.38.37 கோடி மானியத் தொகையில்  50% மானியத் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது தொற்ற பரவல் கட்டுக்குள் இருப்பதால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் உள்ள 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் நடப்பு கல்வியாண்டுக்கு ரூ.38.37 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  அரசு பள்ளிகளில், அதன் முன்தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக,ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை இன்று விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.