கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிப்பு… தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பு…

Must read

சிவகங்கை: கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைகண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்படைந்துள்துடன்,  தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ள அகரம் பண்டைய காலத்தில் வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் என  கருதுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே  கீழடி  பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. மணலூர் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு ஏதும் கிடைக்காததால், அங்கு  ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வில்,  நீர் நிலை அமைப்பு இருந்தற்கான சான்றுகள் கிடைத்து வருகிறது. கொந்தகையில் முதுமக்கள் தாழிகளுடன் கூடிய எலும்புகள் கிடைத்து வருகின்றன. அகரம் பகுதியில் சுடுமண்ணால் தயார் செய்யப்பட்ட முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமைச்சார் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டுஅகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு  அலங்கார பொருட்கள், பொம்மைகள், புகை பிடிப்பான், உறைகிணறுகள், சுடுமண் குழாய்கள், சுடுமண்முத்திரை, உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கழுத்து, காது ஆகியவற்றில் அணியும் இரண்டு தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அறுங்கோண வடிவிலான இந்த ஆபரணத்தில் புள்ளிகள் வரையப்பட்டுள்ளன. கழுத்தில் அணிய வசதியாக நடுவில் துளையிட்டுசிறிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். மற்றொருண்டு காதில் அணியும் குண்டுமணி வடிவ கம்மல் ஒன்றும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆறாம் கட்டஅகழாய்விலும் அகரத்தில் வீரராகவன் காசு எனப்படும் தங்க காசு கண்டறியப்பட்டது. எனவே அகரம் பண்டைய கால வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் எனதொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

More articles

Latest article