சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன் உள்பட 20 சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக உடைந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஓபிஎஸ் தனியாக சென்றார். இதனால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. பின்னர், இருவரும் இணைந்து, அதிமுக சின்னமான இரட்டை இலையை மீட்டனர். முன்னதாக, சசிகலா அணியில் இருந்த டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க முயற்சி செய்தார். இதனால், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க முயற்சி மேற்கொண்டார். இதற்காக டிடிவி தினகரன் ரூ.50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட புகாரிலும் சுகாஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டான்.  கடந்த 2017ம்ஆண்டு ஏப்ரல் 17ந்தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர்  மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளன.

டிடிவி தினகரனுக்கு உதவி மோசடி பேர்வழியான சுகேஷ் சந்திசேகரன் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர்மீது இதுவரை 21 வழக்குகள் உள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து 20கோடி ரூபாய் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்ததாக சுகாஷ் சந்திரசேகரும், அவனது காதலி நடிகை லீனா மரியம்பாலும் கைது செய்யப்பட்டனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகாஷ் சந்திரசேகர், அவ்வப்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில், அந்த காலக்கட்டத்திலும் 200கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லியிலுள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு வழக்குப்பதிந்தனர். அத்தோடு, சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற சட்டப்பிரிவில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் இன்று சுகாஷ் சந்திரசேகருக்க சொந்தமான ஈ.சி.ஆர். கானாத்தூர் அருகே உள்ள பண்ணை வீட்டில் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்டது. இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்கள் உட்பட சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சொகுசு கேரவன் உள்பட 20 சொகுசு கார்களை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்தும் பறிமுதல் செய்தனர். மேலும், சுகாஷ் சந்திரசேகர் பயன்படுத்திய லேப்டாப், 70 ஆயிரம் பணத்துடன் வழக்கு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பறி அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகிறது.

சுகாஷ் சந்திரசேகருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டைச் சுற்றிலும் இருபது அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து, யாரும் உள்ளே செல்ல முடியாதபடி மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.  திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வரும் சுகாஷ் சந்திரசேகர் இந்த பண்ணை வீட்டில் தான் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

 

இரட்டை இலைக்கு லஞ்சம்: யார் இந்த சுகேஷ் சந்தர்? திடுக்கிடும் தகவல்கள்…