சென்னை
சென்னையில் 31 நாட்களுக்குப் பிறகு டீசல் விலை குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருந்து வந்தது. இது குறித்து மத்திய அரசிடம் பலரும் வேண்டுகோள் விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தைய காங்கிரஸ் அரசு வெளியிட்ட கடன் பத்திரங்கள்: காரணமாக விலையைக் குறைக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். அது தவறானது எனப் பல நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னையில் 31 நாட்களுக்குப் பிறகு டீசல் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசுகள் குறைந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.20 க்கு விற்கப்படுகின்றது.
கடந்த 5 நாளாக பெட்றோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.