மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதனால், டிசம்பர்வரை கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் ஷாஜி செரியன் கூறியுள்ளார்.

திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி. டொவினோ தாமஸ் நடித்துள்ள இந்தப் படத்தை பாசில் ஜோசப் இயக்கியுள்ளார்.

மின்னல் முரளி போன்று மேலும் பல பெரிய பட்ஜெட் மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.