பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் திருமதி கல்யாணி மேனன் காலமானார். இவருக்கு வயது 80, காவேரி மருத்துவமனையில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார்.

கல்யாணி மேனன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகு மான் ஆகியோர் பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். சுஜாதா என்ற படத்தில், ’நீ வருவாய் என’, ’முத்து’ படத்தில் ’குலுவாளிலே முத்து வந்தல்லோ’, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், ’ஓ மணப்பெண்ணே’, விஜய்சேதுபதியின் ‘96’ படத்தில் காதலே காதலே உட்பட தமிழ், மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.

மறைந்த கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன் தவிர, கருணாகரன் மேனன் என்ற மகனும் உள்ளார்.

மறைந்த கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெற இருக்கிறது.