2.50 கோடி ரூபாய்க்கு உலகின் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான்….!

Must read

மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.

சமீபத்தில் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் போஸ்டர்கள் வெளிவந்தன.

இந்நிலையில் துல்கர் சல்மான் விலையுயர்ந்த சொகுசு காரான Mercedes-AMG G 63 FL-யை வாங்கியுள்ளார். இதை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்ப்பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 2.50 கோடியாகும். 96 லிட்டர் பெட்ரொல் கொள்ளவுடன் 8 கிலோமீட்டர் மைலேஜில் மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். வெறும் 5 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை அடையும். மேலும் இந்த வாகனம் குண்டு துளைக்காத Bullet Proofing செய்யப்பட்டது.

https://www.facebook.com/bridgewaymotors/posts/4627763937233582

More articles

Latest article