மூத்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 94.

“ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” என்ற பழமொழி வார்த்தையைக் காந்திமதியை அர்ச்சித்து ’16 வயதினிலே’ படத்தில் ஒரு வசனம் வரும். அந்த ஆவேசமான, ஆனால் இனிமையாக பேசி அசத்திய குரலுக்குரியவர்தான் ஜெமினி ராஜேஸ்வரி.

1000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி வில்லன் கே.கண்ணனின் ‘கண்ணும் இமையும்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் ஒரு வாய்ப்பை இவருக்கு அளித்தார்.

50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘எதிர் நீச்சல்’ படத்தில் இவர் நடித்துள்ளார்.