சென்னை

ன்று பகல் 12 மணிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியைப் பறி கொடுத்தது.  தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

வரும் 21 ஆம் தேதி அன்று இந்த சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கூட உள்ளது.   இந்த கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.   இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா பதவி குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.  மேலும் வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.