தலைவர்கள் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த யூ டியூபர் கைது

Must read

சென்னை

றைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்

திமுக ஆட்சியைப் பிடித்ததில் இருந்து பலரும் சமூக வலைத் தளங்களில் திமுகவைப் பற்றியும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்தும் தவறாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  இது குறித்து அரசு மற்றும் திமுகவினர் எச்சரிக்கை விடுத்தும் பலரும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து கருத்துக்களைப் பதிவிட்டு வரும் கிஷோர் கே சாமி என்பவர் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து அவதூறாகவும் இழிவாகவும் பதிவிட்டு வந்ததாகத் தெரிகிறது.

இதையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கிஷோர் கே சாமி மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

More articles

Latest article