சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்களின் பணி மாற்றம் கலந்தாய்வில் மட்டுமே நடைபெறும், அது தொடர்பாக அமைச்சர் அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டும் என கோட்டையில் உள்ள  தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரின் மா.சுப்பிரமணியன் அறை வாசலில்  நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அரசு பணிகள் வெளிப்படையாக நடைபெறுகிறது என்பதையும், துறை ரீதியிலான பணி மாறுதல்கள் வெளிப்படையாக கலந்தாய்வு முறைப்படியே நடைபெறும் என்பதை அமைச்சர்  உறுதிப்பட கோடிட்டு காட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அலுவலக வாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாண்புமிகு ததிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியிட மாறுதல்கள் அனைத்தும் வெளிப்படையான (Transparency) கலந்தாய்வின் வாயிலாக  நடைபெறுவதால், பணியிட மாறுதல் தொடர்பாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்தை அணுக வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. – அமைச்சர் அலுவலகம்

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.