சென்னை: முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கருப்புப்பூஞ்சை மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த பணத்தில் இருந்து, கருப்புப் பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், #Donate2TNCMPRF-க்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி! இத்தொகையிலிருந்து #COVID19 சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது. அதன்படி இந்த நிதியானது கருப்புப் பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை வாங்க கரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.