கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
இதற்கிடையே கொரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி, நிதிஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் :
“நிலைமை மிகவும் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கிறது. இதனால் பல இழப்புகள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது! ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சங்கிலியை உடைப்போம். முக கவசம் அணியுங்கள். வீட்டில் தனித்திருங்கள். பாதுகாப்பாக இருங்கள். தடுப்பூசி போடுங்கள். ஒன்றாக நாம் மிக விரைவில் வெல்வோம்” எனக் கூறியுள்ளார்.