
யோகி பாபு பெயரில் ட்விட்டரில் புதிதாக கணக்கு தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த போலி கணக்கில், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் படத்தை வெளியிட்டு, “டஃப் காம்படீசன் சார்” என்று கமெண்டும் போட்டிருந்தார்கள். கமலுக்கே கமெண்ட் போட்டவர்கள் நாளை மோடிக்கு சவால்விட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதனால், உஷாராக, அது போலி என்று ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்கிறார் யோகி பாபு.
சில தினங்கள் முன்பு சிபிராஜ் படத்துக்கு நாயகி தேவை என்று சிபியின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]Its fake id. Please do not follow that friends. pic.twitter.com/tvDye5BHo4
— Yogi Babu (@iYogiBabu) May 2, 2021