சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், பெரும்பான்மை பெற்றுள்ள திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.  அடுத்த தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில்,அவரை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக  ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார் போகிறார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திமுக தலைவர் ம க ஸ்டாலின் அவர்களை  தமிழக டிஜிபி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உயர்அதிகாரிகளின் கார்கள் கோபாலபுரத்தைத் நோக்கி  சென்றுகொண்டிருப்பதாகவும்,  தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்படபல உயர்அதிகாரிகள்   முக ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து  தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.