4ccada68-9cdb-4446-b52f-959aecbf87d3
 
அரண்மனை, காஞ்சனா என பேய்ப்பட தொடர்கள்(!) வெற்றி பெறுவதை அடுத்து, பேய் சீசன் துவங்கிவிட்டது போலும்.
இந்த வரிசையில் வருகிறது “சவுகார்பேட்டை” . 
சாந்தமான ஹீரோவாக ஸ்ரீகாந்தும், டெரரான நாயகியாக ராய்லட்சுமிராயும் நடிக்கிறார்கள்.
இவர்களுடந்  சரவணன், சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி,மனோபாலா,  விவேக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. 
படத்தின் இயக்குநர் வடிவுடையான், “இது நூறு பர்சென்ட் பேய் படம். தியேட்டருக்கு வந்தால் பயம் நிச்சயம்” என்று  அச்சமூட்டுகிறார். 
அதோடு, “சவுகார்பேட்டை படம் சிறப்பாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ்  அடுத்தும் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்” என்கிறார் சந்தோஷமாக!
ff5d9c95-8c16-4415-a3ea-91ab0d873578
அது இருக்கட்டும், கதை என்ன என்றால், “அதெல்லாம் இப்ப சொல்லக்கூடாது சார். ஆனா  ராய்லட்சுமி ஒரு பாட்டுக்கு பேயாட்டம் போட்டிருக்காங்க… அது போல ஒரு ஆட்டம் இதுவரை எந்த படத்திலும் வந்ததில்லை” என்கிறார்.
ராய்லட்சுமி படத்தை பார்த்தாலே டெரராத்தான் இருக்கு!

[youtube-feed feed=1]