சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு லாக்டவுன் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு விளக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதி வரை தான் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.