நேற்று தமிழில் கர்ணனும், தெலுங்கில் வக்கீல் ஸாப்பும் வெளியாயின. இவ்விரு படங்களும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் வெளியானது.
முதல்நாளில் கர்ணன் ஆஸ்திரேலியாவில் 36 இடங்களில் வெளியானது. அங்கு முதல்நாள் வசூல் 37,815 ஆஸ்திரேலியன் டாலர்கள் அதாவது ரூபாயில் சுமார் 21.54 லட்சங்கள். இதையடுத்து ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கர்ணனுக்கு 12-வது இடம் கிடைத்துள்ளது.
வக்கீல் ஸாப் ஆஸ்திரேலியாவில் 55 இடங்களில் வெளியாகி 1,47,571 டாலர்களை வசூலித்துள்ளது. அதாவது ரூபாயில் சுமார் 84.07 லட்சங்கள். பாக்ஸ் ஆபிஸில் 7 வது இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்தில் கர்ணன் நேற்று 9 இடங்களில் வெளியாகி 4,991 டாலர்களை வசூலித்துள்ளது. இது சுமாராக 2.62 லட்சங்கள். நியூசிலாந்து பாக்ஸ் ஆபிஸில் 13-வது இடம் கர்ணனுக்கு கிடைத்துள்ளது.
அங்கு வக்கீல் ஸாப் 13 இடங்களில் வெளியாகி 1,0667 டாலர்களை வசூலித்துள்ளது. இது சுமார் 5.61 லட்சங்கள். பாக்ஸ் ஆபிஸில் அதே 7 வது இடம்.