மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதமான தலைவி ஏப்ரல் 23 வெளியாவதாக அறிவித்த நிலையில், பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 வேகமாக பரவி, மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுப்பாடுகளின் நடுவில் தலைவியை வெளியிட்டால் போட்ட காசு திரும்பாது என்பதால், பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்று மறுபடியும் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.