அரக்கோணம்: தேர்தல் எதிரொலியாக அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்ந்து, இரு கட்சியிருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்மதல், அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்களை, மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.இதனால் மேலும் பரபரப்பபு ஏற்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த காவல்துறையினர்இ 2 பேர் கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel