டேராடூன்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரத் சிங் ராவத்துக்கு கடந்த மாதம் 22ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
இந் நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் திரத் சிங் ராவத் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது தெரிய வந்தது. திரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10ம் தேதிதான் திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]