படங்கள் இயக்குவது மட்டுமன்றி, ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்ற நிறுவனம் மூலம் படங்களும் தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
வைபவ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் தற்போது தயாரித்து வருகிறார்.
தற்போது இந்தப் படத்துக்கு ‘பபூன்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை கௌதம் மேனன், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
Here is the first look of #Buffoon my hearty wishes to my brothers @actor_vaibhav and @karthiksubbaraj all da best team@ashokveerappan
@StoneBenchFilms@Music_Santhosh@kaarthekeyens @sudhans2017@AnaghaOfficial@passionstudios_@DKP_DOP@kabilanchelliah pic.twitter.com/ApK2KZPITE— venkat prabhu (@vp_offl) March 29, 2021