Popcorn box; Disposable cup for beverages with straw, film strip, ticket and clapper board. Detailed vector illustration. EPS10 file.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.

தற்போது அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்திய நேர்க்காணலில் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்டிருந்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் முடிந்துவிட்டது. இப்போது ஸ்பெயினில் சண்டைக் காட்சிகளை படமாக்க குழு காத்திருக்கிறது. இதற்கிடையே அஜித்தின் ‘வலிமை’ கடினமான அதிரடி சண்டை காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக்டு குடும்பப் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலிடம் தெரிவித்தார். அதோடு ‘வலிமை’ நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.