டைரக்டர் அகிஷோரா சாலமன் இயக்கும் புதிய படம் “வைல்ட் டாக்”.

நாகார்ஜுனா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தியா மிஸ்ரா நடித்து வருகிறார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது.

என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு முகமையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நாகார்ஜுனா நடித்துள்ளார்.

அண்மையில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ஏ.கே. 47 ரக துப்பாக்கியை கையில் பிடித்தபடி நாகார்ஜூனா ஓடிவரும் காட்சிகள் ,அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– பா. பாரதி

[youtube-feed feed=1]