சென்னை: சென்னை விருக்கம்பாக்கம் தொகுதியில், திமுக வேட்பாளராக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜாவுக்கு திமுக தலைமை வாய்ப்பு நல்கியுள்ளது. இதனால், கடும் அதிருப்தியடைந்த முன்னாள் திமுக கவுன்சிலர் தனசேகரன் ஆதரவாளர்கள், விக்கிரமராஜா மற்றும் அவரது மகனுக்கு எதிராக போராட்டம் மற்றும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, தற்போது, விருகம்பாக்கம் முன்னாள் திமுக கவுன்சிலர் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா வெற்றிபெற பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 173 வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில், விருக்கம் பாக்கம் தொகுதி தற்போதைய எம்எல்ஏ தனசேகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டார். இதற்கு அந்த பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்
அதைத்தொடர்ந்து, பிரபாகர் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் திமுக கவுன்சிலர் தனசேகர் எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பிரபாகர் ராஜாவின் குடும்பத்தினர் அதிமுக, பாஜக, பாமக ஆகிய ஒவ்வொரு கட்சியிலும் உள்ளதாக குற்றம்சாட்டினார். இதனிடையே சீட் கொடுக்காத அதிருப்தியில் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ தனசேகர், திமுகவை விட்டு விலகப்போவதாகவும் அறிவித்தார். தொடர்ந்து, வாக்கு சேகரிக்கச் சென்ற போது பிரபாகர் ராஜாவின் கார் மீது தனசேகரனின் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கே.கே. நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் திமுக தலைமையிடம் திருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனசேகரனை அழைத்து திமுக தலைமை பேசியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தனசேகரன், பிரபாகர் ராஜா வெற்றிக்கு பாடுபடுவோம், ஒற்றுமையாக தேர்தலை சந்தித்து, உதய சூரியன் வெற்றியை உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.