சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேர்பாளர் பட்டியல் என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 6வது கட்ட தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.
தமிழகம் சட்டமன்ற தேர்தலில்போட்டியிட வேட்புமனுத்தாக்கல் நாளை மறுதினம் (12ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது
இதையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6வது கட்ட சுற்றுப்பயணத்தை ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். அதன்படி, மார்ச் 12 மற்றும் 13-ம் தேதி சேலம்,நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்பட பல இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.