நடிகர் அரவிந்தசாமி தெய்வீகராகம் என்ற மலையாளப் படத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்தார்.
பல இயக்குநர்கள் அவரை மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க அழைத்தனர்.
சரியான ‘ஸ்கிரிப்ட்’ அமையாததால் அவர் நடிக்கவில்லை இப்போது ‘ஒட்டு’ என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருடன் இன்னொரு ஹீரோவாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.
டி.பி.பெல்லின், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.
சாலை பயணத்தை மையமாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
“நண்பர் ஒருவர் மூலம் அரவிந்தசாமி எனக்கு அறிமுகம் ஆனார். இந்த கதையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவரிடம் சொன்னேன். கதை பிடித்துப்போனது. ஒத்துக்கொண்டார்.
மும்பை, கோவா, மங்களூரு ஆகிய இடங்களில் ஷுட்டிங் நடத்த உள்ளோம்” என்கிறார் இயக்குநர்.
– பா. பாரதி