டில்லி

நாளை முதல் ஃபாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் காலக்கெடு மேலும் நீட்டிப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு வாகனமும் சுங்கச் சாவடிகளில் நின்று கட்டணம் செலுத்தி விட்டுச் செல்ல நேரம் ஆவதால் பயண நேரம் அதிகரித்து வந்தது. எனவே பல நேரங்களில் பயணிகள் மற்றும்  பொருட்கள் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது.  எனவே இதற்கான மாற்று முறையாக ஃபாஸ்டாக் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 2016 ஆம் வருடம் ஃபாஸ்டாக் முறை என்னும் மின்னணு சுங்க சாவடி கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.   இந்த முறைக்கு அனைத்து வாகனங்களும் மாற வேண்டும் எனப் பலமுறை அறிவிக்கப்பட்டு அதற்கான காலக்கெடுவும் ஏற்கனவே 2,3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.   நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி, “அனைத்து சுங்கச்சாவடிகள் வரிசைகளும் தற்போது ஃபாஸ்டாக் ஆக மாற்றப்பட்டுள்ளது,.  எனவே பழைய முறை தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.  தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் சுமார் 90% பேர் ஃபாஸ்டாக் முறையைப் பின்பற்றுகின்றனர்.

ஃபாஸ்டாக் முறை அமலாக்கத்துக்கான காலக்கெடு இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது.  எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் இந்த முறைக்கு உடனடியாக மாற வேண்டும்.  தற்போது ஃபாஸ்டாக் பதிவு சுங்கச்சாவடிகளில் செய்யப்படுவதால் வாகன உரிமையாளர்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]