
டாக்கா: விண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வங்கதேச வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 409 ரன்களைக் குவித்த விண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அதில் பாதியைக்கூட எட்ட முடியவில்லை. அந்த அணியின் நிக்ருமா பானர் எடுத்த 38 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். மொத்தம் 52.2 ஓவர்களே ஆடி, 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை பறிகொடுத்து, எளிய இலக்கையே வங்கதேசத்திற்கு நிர்ணயித்தது விண்டீஸ் அணி.
தற்போது, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், விக்கெட் இழப்பின்றி 39 ரன்களை எடுத்துள்ளது.
[youtube-feed feed=1]