
டோக்கியோ: ஒலிம்பிக் தொடர்பாக ஜப்பான் மக்களின் கருத்து வேறுமாதிரியாக இருப்பதால், ஒத்திவைக்கப்பட்டபடி, இந்தாண்டு ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக, 2021ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. கணக்குப்படி, போட்டிகள் துவங்க இன்னும் 6 மாதங்களே உள்ளன.
இந்நிலையில், ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தலாமா? என்பது குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டவர்களில் 80% மக்கள், கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று கருத்து கூறினார்.
இந்த கருத்துக்கணிப்பு குறித்து ஜப்பான் அமைச்சர் டாரோ கோனோ கூறுகையில், “திட்டமிட்டப்படி, ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடத்தப்படும். ஆனால், சூழ்நிலை நினைத்தபடி சாதகமாக இல்லை. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி பார்த்தால், எதுவும் நடக்கலாம்” என்று பொடிவைத்து பேசியுள்ளார்.
ஜப்பானின் ஒரு அமைச்சரே இப்படி பேசியிருப்பதால், ஒலிம்பிக் போட்டிகளின் கதி என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]