காலே: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து ஆடிவரும் இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள‍ை எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் எண்ணிக்கையைவிட 130 ரன்கள் பின்தங்கியுள்ளது இலங்கை அணி.

இலங்கையின் துவக்க வீரர் குசால் பெரரா 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். லஹிரு திரமன்னே 76 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார்.

இந்தப் போட்டியை டிரா செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் நாளை முழுநாளும் தாக்குப்பிடித்து ஆடி, இங்கிலாந்துக்கு 300க்கும் மேற்பட்ட ரன்களை, நான்காம் நாளில் இலக்காக நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் இங்கிலாந்து அணி டிராவைப் பற்றி யோசிக்கும்.

ஒருவேளை, நாளை விரைவிலேயே விக்கெட்டுகளை இழக்கும்பட்சத்தில், குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் இலங்கை அணி.