திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சர் சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவுக்கு மத்தியக் குழுவினர் சென்றனர். கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் 2 நாள்கள் ஆய்வு செய்திருந்த நிலையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கொரோனாவை எதிர்கொள்வதில் சுகாதாரத் துறை நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel